இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு 1.6 கோடி இலவச கொரோனா தடுப்பு மருந்துகள்
இஸ்லாமாபாத்,
இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் உள்நாட்டு தேவை போக இலங்கை, நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் வினியோகிக்கப்படுகின்றன.
இவற்றில் சில நாடுகள் இலவச அடிப்படையிலும் மருந்துகளை பெற்று கொள்கின்றன. இதன்படி சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மார்ச் மத்தியில் முதல் தொகுப்பு மருந்துகளை பாகிஸ்தான் நாடு பெற்று கொள்ளும். 2வது தொகுப்பு மருந்துகளை ஜூன் மாதத்திற்குள் பெற்று கொள்ளும்.
அந்நாட்டின் 4.5 கோடி மக்களுக்கு தேவையான இலவச மருந்துகளை தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு சர்வதேச கூட்டணி (காவி) என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் இருந்து பெற்று கொள்கிறது.
இதுவே சீனாவிடம் இருந்து கேன்சினோ என்ற அந்நாட்டு தடுப்பு மருந்துகளை பாகிஸ்தானிய மதிப்பில் நபர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் என்ற செலவில் பெற வேண்டும்.