சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம், மார்ச் 7நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
நடந்தது. இதையொட்டி சீதா, லெட்சுமன், அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி
தரிசனம் செய்தனர்.இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி
சிறப்புவழிபாடுநடந்தது.இதையொட்டிலெட்சுமிநரசிம்மர்,சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராமர், ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆலங் குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்டகோவில்களிலும் கதை
கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.