திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு
தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்
திருவாரூர், மார்ச்.9திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்
தேரோட்டத்தை முன்னிட்டு தேர்
அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக
நடைபெற்று வருகிறது.
ஆழித்தேரோட்டம்
தொன்மையான தலங்களில் திருவாரூர்
தியாகராஜர் கோவில் முதன்மையானது.
ஆசியாவிலே மிகப்பெரிய தேராக ஆழித்
தேர் என்கிற சிறப்புக்குரியது. பங்குனி உத்திர
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழத்
தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்
றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு
இருந்த நிலையில் ஆழித்தேரோட்ட விழா
ரத்தானது.
இந்த ஆண்டு கடந்த 2-ந்தேதி பங்குனி
உத்திர திருவிழா கொடியேற்றத்துடன்
தொடங்கியது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆகமவிதிப்படி ஆயில்ய நட்சத்திரமான
வருகிற 25-ந்தேதி ஆழித்தேரோட்ட விழா
நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத
னால் பக்தர்கள் உள்பட அனைவரும்
மகிழ்ச்சியடைந்தனர்.
தேர் அலங்கரிக்கும் பணிகள்
ஆழித்தேரோட்டத்திற்கு குறுகிய நாட்
களே உள்ளதால் தேர் அலங்கரிக்கும் பணி
கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆழித்தேருடன் விநாயகர், சுப்பிரமணியர்
தேர் அலங்கரிக்கும் பணிகளும் நடைபெற்று
வருகிறது.
மேலும் வழி நெடுகிலும் பந்தல் அமைக்
கும் பணியும் நடைபெற்று வருகிறது. தேர்
அலங்கரிக்கும் பணியினால் கீழவீதியில்
போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு
தெற்குவீதி, மேலவீதி வழியாக வாகன
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்
ளது.